.webp)
பெற்றோலிய உற்பத்தி பொருட்களுக்கான விசேட ஏற்பாடுகளை திருத்தும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட துறைகள் தமக்கு தேவைப்படும் எரிபொருளின் அளவை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்காக முறையாக அடையாளம் காணப்பட்ட பிரிவினருக்கு இதற்கான உரிமங்கள் வழங்கப்படவுள்ளன.
ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.