பிரித்தானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல்!

பிரித்தானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல்!

பிரித்தானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல்!

எழுத்தாளர் Rajalingam Thrisanno

13 Aug, 2022 | 7:03 pm

பிரித்தானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய சம்பவத்தில் தொடர்புடைய  சந்தேகநபர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.

நியூ ஜேர்ஸியை சேர்ந்த ஹாடி மடர் (Hadi Matar) என்ற 24 வயதுடையவரே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

குறித்த நபரின் சமூக வலைத்தளங்களில் ஷியா குழுக்கள் தொடர்பான பதிவுகள் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சல்மான் ருஷ்டி  நேற்றைய (12) தினம் நியூயோர்க்கில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வொன்றில் உரையாற்ற முற்பட்ட போது சந்தேகநபர் மேடையில் அத்துமீறி நுழைந்து கத்தியால் தாக்கியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சந்தேகேநபரின் கைப்பையும் இலத்திரனியல் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நியூயோர்க் பொலிஸார் சந்தேநபரின் குற்றப் பின்னணி தொடர்பில் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பல ஆண்டுகளாக உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுவருகிறார்.  

கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த ருஷ்டிக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன் அவர் ஒரு கண்ணை இழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சல்மான் ருஷ்டியின் கையில் உள்ள நரம்புகள் அறுபட்டிருப்பதாகவும் கல்லீரல் சேதமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்