14 வயது சிறுமியை கடத்திய இருவர் கைது!

14 வயது சிறுமியை கடத்திய இருவர் கைது!

14 வயது சிறுமியை கடத்திய இருவர் கைது!

எழுத்தாளர் Rajalingam Thrisanno

12 Aug, 2022 | 5:58 pm

பதுளை – லுணுகல பகுதியில் 14 வயது சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் காதலன் எனக்கூறப்படும் இளைஞர் ஒருவரும் மற்றுமொரு நபருமே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுணுகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை 08 நாட்களாக உடகிருவ காட்டுக்குள் மறைத்து வைத்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

லுணுகல மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 18, 53 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லுணுகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்