.webp)
ஜனாதிபதி மாளிகைக்குள் முறையற்ற விதத்தில் பிரவேசித்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட டானிஸ் அலி உள்ளிட்ட 04 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்படுவதால் சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்குமாறு கோட்டை பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கோட்டை நீதவான் சந்தேகநபர்களான டானிஸ் அலி உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதாக உத்தரவிட்டார்.