.webp)
யாழ்ப்பாணம் கொக்குவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
நேற்று மாலை 4.30 அளவில் மயங்கி வீழ்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
புன்னாலைகட்டுவன் பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்ப சென்ற அவர் QR CODE பரிசோதனையின் பின்னர் எரிபொருள் பம்பிக்கு அருகில் நின்ற போது மயங்கி வீழ்ந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.