முட்டை மற்றும் கோழி இறைச்சி குறித்து துரித விசாரணை

முட்டை மற்றும் கோழி இறைச்சி குறித்து துரித விசாரணை

முட்டை மற்றும் கோழி இறைச்சி குறித்து துரித விசாரணை

எழுத்தாளர் Rajalingam Thrisanno

11 Aug, 2022 | 6:50 pm

முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ள வர்த்தக – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

முட்டை மற்றும் கோழி இறைச்சி அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

முட்டை ஒன்றின் விலை 55 முதல் 60 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 250 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இவற்றுக்கான விலை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என அமைச்சர்  நலீன் பெர்னாண்டோ கூறியுள்ளார். 

முட்டை மற்றும் கோழி இறைச்சி நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து கலந்துரையாடுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக அவர்களுக்கான செலவுகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான நிர்ணய விலை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நலீன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்