ஜனாதிபதியை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள்

ஜனாதிபதியை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள்

ஜனாதிபதியை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள்

எழுத்தாளர் Rajalingam Thrisanno

11 Aug, 2022 | 5:35 pm

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

இந்த சவாலான காலப்பகுதியில் இலங்கையின் பங்குதாரராக தாம் இணைந்திருப்பதாக ட்விட்டர் பதிவொன்றின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சிவில் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதுடன் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வதற்குள்ள உரிமை மிக முக்கியமானது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை மீண்டும் சிறந்த பயணத்தை நோக்கி முன்னேற ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வௌிநாட்டு அலுவல்கள் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள மூன்று விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் தாம் தெரிவித்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

GSP+, IMF மற்றும் மனித உரிமை பேரவை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக  இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்