.webp)
Colombo (News 1st) கடந்த வாரங்களில் பிரதான ரயில் மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால், சுமார் 16 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆசனங்கள் முற்பதிவு செய்யப்படும் பதுளை - கொழும்பு ரயில்களும் இரத்து செய்யப்பட்டதால், நாளாந்தம் 2 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், கடந்த முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்த நட்டம் பதிவாகியுள்ளது.
நாவலப்பிட்டி - நானுஓயா இடையிலான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட இடையூறுகளால், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த ரயில்களையும் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு - பதுளை இடையிலான தபால் ரயில்கள் சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.