.webp)
Colombo (News 1st) பல கட்சிகள் இன்று தனித்தனியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஶ்ரீலங்கா முஸ்லிங் காங்கிரஸிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளும் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான C.V. விக்னேஸ்வரனும் இன்று ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
இன்று ஜனாதிபதியை சந்தித்த பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.