மஹிந்த, பசிலுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடை செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நீடிப்பு

மஹிந்த, பசிலுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடை செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நீடிப்பு

மஹிந்த, பசிலுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத் தடை செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2022 | 3:46 pm

Colombo (News 1st)  முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கான வௌிநாட்டு பயணத் தடை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இலங்கை வணிக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட சில தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்