கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல்

கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல்

கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல்

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2022 | 4:19 pm

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை (11) தாய்லாந்திற்கு செல்ல எதிர்பார்த்துள்ளதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது.

தற்காலிகமாக அவர் அங்கு தங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாக கடந்த ஜூலை மாதம் நாட்டிலிருந்து வௌியேறி மாலைத்தீவிற்கு சென்றிருந்தார்.

பின்னர் அங்கிருந்து  பயணித்த கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரில் தங்கியிருந்தார்.

சிங்கப்பூருக்கு சென்றதன் பின்னர், இலங்கை ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஸ இராஜினாமா செய்திருந்தார். 

இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து நாளை தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கிற்கு அவர் செல்லவுள்ளதாக இரண்டு மூலங்களூடாக உறுதிப்படுத்திக்கொண்டுள்ளதாக Reuters செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸவின் தாய்லாந்து பயணம் குறித்து எவ்வித கருத்துகளையும் தெரிவிக்க முடியாது என தாய்லாந்து அரசாங்கத்தின் பேச்சாளர் Ratchada Thanadirek  தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்