காலி முகத்திடலில் இருந்து கூடாரங்களை அகற்றும் போராட்டக்காரர்கள்

காலி முகத்திடலில் இருந்து கூடாரங்களை அகற்றும் போராட்டக்காரர்கள்

காலி முகத்திடலில் இருந்து கூடாரங்களை அகற்றும் போராட்டக்காரர்கள்

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2022 | 3:37 pm

Colombo (News 1st) 123 நாட்களாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை அகற்றுவதற்கு இன்று காலை முதல் போராட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக போராட்டக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தையும் அகற்றுவதற்கு போராட்டக்காரர்கள் இன்று அதிகாலை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். 

காலி கோட்டாகோகம போராட்டக்களத்தில் தற்காலிக கூடாரங்கள் அகற்றப்படுவதை தடுக்குமாறு கோரி,  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 04 மனுக்களும் இன்று மீளப்பெறப்பட்டுள்ளன.

காலி முகத்திடலிலுள்ள போராட்டக்களத்திலிருந்து விலகுவதற்கு ஒன்றிணைந்த குழுவாக தீர்மானம் எடுத்ததாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்தார். 

இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்