ஓய்வை அறிவித்தார் செரினா வில்லியம்ஸ்

ஓய்வை அறிவித்தார் செரினா வில்லியம்ஸ்

ஓய்வை அறிவித்தார் செரினா வில்லியம்ஸ்

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2022 | 7:53 pm

23 தடவைகள் கிரேண்ட்ஸ்லாம் கிண்ணத்தை சுவீகரித்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

எதிர்வரும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் செரினா வில்லியம்ஸின் கடைசி சர்வதேச போட்டியாக  அமையவுள்ளது. 

ஐந்து தடவைகள் உலகின் முதற்தர டென்னிஸ் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ள செரினா வில்லியம்ஸ், அதிகூடிய  கிரேண்ட்ஸ்லாம் கிண்ணங்களை வென்ற வீராங்கனையாகவும் பதிவாகியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மகளிருக்கான டென்னிஸ் போட்டியிலும் செரினா வில்லியம்ஸ் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார். 

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் முதற்தடவையாக கிரேண்ட்ஸ்லாம் கிண்ணமொன்றை செரினா வில்லியம்ஸ் சுவீகரித்திருந்தார். 

மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸூடன் இணைந்து 14 சாம்பியன் பட்டங்களை தனதாக்கிய பெருமையும் செரினா வில்லியம்ஸை சாரும்.

இந்த வருடத்திற்கான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி நியூயோர்க் நகரில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்