SLPP பிரதேச சபை உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடை சந்தேகநபர் கற்குழியில் வழுக்கு வீழ்ந்து உயிரிழப்பு

SLPP பிரதேச சபை உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடை சந்தேகநபர் கற்குழியில் வழுக்கு வீழ்ந்து உயிரிழப்பு

SLPP பிரதேச சபை உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடை சந்தேகநபர் கற்குழியில் வழுக்கு வீழ்ந்து உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2022 | 4:17 pm

Colombo (News 1st) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த பாதாள உலகக் குழுவின் துப்பாக்கிதாரியான ஷிரார் என்றழைக்கப்படும் துவான், நவகமுவ – கொரதொட்ட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை காண்பிப்பதற்கு சென்றிருந்த போது கற்குழியில் வழுக்கு வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

முல்லேரியாவில் கடந்த 02 ஆம் திகதி, கொட்டிகாவத்தை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரான சுமுது ருக்ஷான் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையுடன் துவான் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர் மேலும் சில கொலைச்சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் மற்றுமொருவருடன் சென்று, பிரதேச சபை உறுப்பினரை சுட்டுக் கொலை செய்த பின்னர் சந்தேகநபர் தப்பிச்சென்றிருந்தார்.

42 வயதான பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்