இலங்கையின் தீர்மானத்தை வரவேற்றுள்ள அன்புமணி

சீன கப்பலின் வருகைக்கு இலங்கை தடை; அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

by Bella Dalima 09-08-2022 | 7:25 PM

இந்தியா: சீன உளவுக் கப்பலின் வருகைக்கு இலங்கை தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

இந்திய வௌியுறவுத்துறை விடுத்த தொடர் அழுத்தங்கள் காரணமாக சீனாவின் Yuan Wang 5 உளவுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்திருப்பது, இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பிலான கோணத்தில் வரவேற்கத்தக்க விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை இலங்கை  மதித்து நடப்பதனை இந்திய மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும்  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.