மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

மலையக மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்கு; இரவு நேர தபால் ரயில் சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது

by Bella Dalima 09-08-2022 | 4:59 PM

Colombo (News 1st) மலையக மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், இரவு நேர தபால் ரயில் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய ரயில் சேவைகள் வழமைபோல முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்து செய்யப்பட்ட ரயில்களுக்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தை திருப்பிச்செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணச் சீட்டுகளை பெற்றுக்கொண்ட ரயில் நிலையங்களிலேயே கட்டணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.