க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்: கல்வி அமைச்சர்

க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்: கல்வி அமைச்சர்

க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்: கல்வி அமைச்சர்

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2022 | 3:50 pm

Colombo (News 1st) கல்வி பொது  தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வௌியிட தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும், கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செயன்முறை பரீட்சைகளில் தோற்றுவதற்கான திகதி பிற்போடபட்டமையால், பெறுபேறுகளை இறுதி செய்வது தாமதமாகியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரமளவில் செயன்முறை பரீட்சைகள் நிறைவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் நிறைவடைவதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படும் என சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்