ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மின் கட்டணம் 75% அதிகரிப்பு; PUCSL அனுமதி

ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மின் கட்டணம் 75% அதிகரிப்பு; PUCSL அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2022 | 4:01 pm

Colombo (News 1st) நாளை (10) முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, முதல் 30 அலகுகளுக்கு 264 வீதத்தாலும் 31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 211 வீதத்தாலும் 61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 125 வீதத்தாலும் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

91 முதல் 120 அலகுகள் வரை 89 வீதத்தாலும் 121 முதல் 180 அலகுகள் வரையான மின் பாவனைக்கு 79 வீதத்தாலும் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்