மாற்று கொள்கைக்கான மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் மங்கள மத்துமகே கைது!

மாற்று கொள்கைக்கான மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் மங்கள மத்துமகே கைது!

மாற்று கொள்கைக்கான மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் மங்கள மத்துமகே கைது!

எழுத்தாளர் Rajalingam Thrisanno

08 Aug, 2022 | 6:41 pm

மாற்று கொள்கைக்கான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மங்கள மத்துமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் சென்ற பொலிஸார் மங்கள மத்துமகேவை இன்று கைது செய்துள்ளனர்.

கொழும்பு பொது நூலகத்தில் போராட்டம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொள்ள சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்று கொள்கைக்கான மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் மங்கள மத்துமகே கொழும்பு தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த மே 19 ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  குறிப்பிட்டனர். 

இதனிடையே, மக்கள் எழுச்சி போராட்டத்தின் மற்றுமொரு செயற்பாட்டாளரான பியத் நிகேஷல தனது சட்டத்தரணியூடாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்