மலையகத்திற்கான ரயில் போக்குவரத்தை நாளை முதல் வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை

மலையகத்திற்கான ரயில் போக்குவரத்தை நாளை முதல் வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை

மலையகத்திற்கான ரயில் போக்குவரத்தை நாளை முதல் வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2022 | 7:03 pm

மலையக மார்க்கத்திற்கான ரயில் போக்குவரத்தை நாளை முதல் வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மண்சரிவு அபாயம் மற்றும் வீதித் தடைகள் காரணமாக மலையக மார்க்கத்திற்கான 8 ரயில் சேவைகள் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

தற்போது மலையக மார்க்கத்திலான ரயில் சேவை நாவலப்பிட்டி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரத்துச் செய்யப்பட்ட ரயில் சேவைகளில் முன்பதிவுக்காக செலுத்தப்பட்ட ரயில் கட்டணங்களை பயணிகளிடம் திருப்பி கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயணச்சீட்டுக்களை விநியோகித்த ரயில் நிலையங்களில் முன்பதிவுக்கான கட்டணங்களை திரும்ப பெற்றுக்கொள்ள முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்