ஜோஸப் ஸ்டாலினுக்கு பிணை

ஜோஸப் ஸ்டாலினுக்கு பிணை

ஜோஸப் ஸ்டாலினுக்கு பிணை

எழுத்தாளர் Rajalingam Thrisanno

08 Aug, 2022 | 5:44 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு கொழும்பு கோட்டை நீதவான்  இன்று பிணை வழங்கினார். 

தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடைத்தது.  

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜோசப் ஸ்டாலின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் சமர்ப்பிக்கப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் பிணை வழங்குவதாக அறிவித்தார். 

இதேவேளை, நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இராணுவப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமல் நாலிந்த எனும் இராணுவ சிப்பாய்க்கும் பிணை வழங்கப்பட்டது.

தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இராணுவப் பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றத்தில்  இன்று ஆஜர்படுத்தினர். 

நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபரை கைது செய்ததாக கொழும்பு கோட்டை பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

அதற்கமைய சந்தேகநபர்கள் இருவருக்கும் பொருத்தமான தண்டனையை விதிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்