.webp)
நவகமுவ பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முறைப்பாட்டை விசாரணைக்குட்படுத்துவதற்கு முற்பட்ட வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டார்.
கிடைத்த முறைபாட்டிற்கு அமைய ரணால பகுதியை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த இருவரை பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்திருந்தனர்.
இதன்போது அங்கு வருகை தந்திருந்த இருவரில் ஒருவர் மற்றையவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
சம்பவத்தில் 52 வயதான கரவனெல்ல பகுதியை சேர்ந்தவர் உயிரிழந்ததுடன், 42 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.