விமானப்படை மற்றும் கடற்படைக்கு நன்கொடையாக எரிபொருள் வழங்கிய அவுஸ்திரேலியா

விமானப்படை மற்றும் கடற்படைக்கு நன்கொடையாக எரிபொருள் வழங்கிய அவுஸ்திரேலியா

விமானப்படை மற்றும் கடற்படைக்கு நன்கொடையாக எரிபொருள் வழங்கிய அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Rajalingam Thrisanno

07 Aug, 2022 | 7:01 pm

இலங்கை கடற்படைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 450 மெற்றிக்தொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

கடற்படை நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்காக நன்கொடையாக எரிபொருள் வழங்கப்பட்டதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை விமானப்படைக்கும் அவுஸ்ரேலியாவினால் 27 ஆயிரம் லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

ஜெட் விமானங்களின் பயன்பாட்டிற்காக எரிபொருள் வழங்கப்பட்டதாக விமானப்படைத் தளபதி குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்