சமையல் எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு குறைக்கப்படவுள்ளது – லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு குறைக்கப்படவுள்ளது – லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு குறைக்கப்படவுள்ளது – லிட்ரோ நிறுவனம்

எழுத்தாளர் Rajalingam Thrisanno

07 Aug, 2022 | 7:26 pm

சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாவிற்கு மேல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு முதல் புதிய விலையில் எரிவாயு விற்பனை செய்யபடுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இரண்டரை வருடங்களின் பின்னர் கடந்த ஜூலை மாதம் லிட்ரோ நிறுவனம் இலாபத்தை ஈட்டியதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, மூவாயிரத்து 800 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவிக்கின்றது.

எரிவாயுவை தரையிறக்கும் செயற்பாடுகள் நாளை மறுதினம்  ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் நாட்டிற்கு வருகை தந்த கப்பலிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த கப்பலில் மூவாயிரத்து 800 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்