இவ்வாரம் புதன்கிழமையும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்

இவ்வாரம் புதன்கிழமையும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்

இவ்வாரம் புதன்கிழமையும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்

எழுத்தாளர் Rajalingam Thrisanno

07 Aug, 2022 | 6:31 pm

நாளை ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் முன்னெடுக்குமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி அரச விடுமுறை என்பதால் புதன்கிழமை பாடசாலைகளை திறக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று வீட்டிலிருந்து கல்வி நடவடிக்கையை முனனெடுக்குமாறும் அல்லது இணைய வழி மூலம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் அனைவரும் ஆகக் குறைந்தது, வாரத்தில் 03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து அசௌகரியங்கள் காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் 03 நாட்களுக்கு மாத்திரம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இவ்வாறான பாதிப்புகள் இல்லாத, நாட்டின் சில மாவட்டங்களில் வாரத்தின் ஐந்து நாட்களும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, வட மாகாண அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை 5 நாட்களும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாளை முதல் வாரத்தின் ஐந்து நாட்களும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் பிரமத செயலாளரினால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பில் வலய கல்வி பணிப்பாளர்கள், குறித்த பாடசாலைகளின் அதிபர்களால் தீர்மானம் மேற்கொள்ள முடியும் எனவும் வடமாகாண கல்வி அமைச்சின் பிரமத செயலாளரின் சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்