QR குறியீட்டின் கீழ் நாளை வரை பதிவு செய்யலாம்

QR குறியீட்டு முறைமையின் கீழ் பதிவு செய்ய நாளை (07) வரை சந்தர்ப்பம்

by Bella Dalima 06-08-2022 | 4:23 PM

Colombo (News 1st) QR குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருளுக்காக பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் நாளை (07) மாலை வரை வழங்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரிவொன்றில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப் பணிகள் காரணமாக, சுமார் 48 மணித்தியாலங்களாக QR குறியீட்டு முறைமையின் கீழ் பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் அற்றுப் போனது.

எனினும் QR முறைமையில் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சரின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.