உடுகம்பொலயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

உடுகம்பொலயில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

by Bella Dalima 06-08-2022 | 4:31 PM

கம்பஹா: உடுகம்பொல - கெஹெல்பத்தர பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 10.20 அளவில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

சம்பவத்தில் சிகையலங்கார நிலையத்திலிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.