அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 25% வரை வீழ்ச்சி

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 25% வரை வீழ்ச்சி

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 25% வரை வீழ்ச்சி

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2022 | 4:55 pm

Colombo (News 1st) அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25% வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திறந்த கணக்குகள் மூலம் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்,  பொருட்களுக்கான தட்டுப்பாடு குறைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே பொருட்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அமைச்சர் கூறினார்.

எதிர்வரும் நாட்களில் மேலும் பல பொருட்களின் விலைகள் குறைவடையும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார். 

ஒரு கிலோ பருப்பின் விலை 150 ரூபாவால் குறைவடைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்