வார இறுதி நாட்களில் மின்வெட்டு இல்லை

வார இறுதி நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

by Bella Dalima 05-08-2022 | 5:18 PM

Colombo (News 1st) வார இறுதி நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாளையும் (06) நாளை மறுதினமும் (07) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இதனிடையே, இன்றைய தினம் ஒரு மணித்தியாலத்திற்கு மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

இதனடிப்படையில்,  A தொடக்கம் L வரையான வலயங்கள்  மற்றும்  P தொடக்கம் W வரையான வலயங்களில் இரவு நேரத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்மின் உற்பத்தி அதிகரிப்பினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்நாட்களில் மொத்த மின்சார உற்பத்தியில் நீர்மின் உற்பத்தி 60 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.