தானிஷ் அலியின் விளக்கமறியல் நீடிப்பு

தானிஷ் அலியின் விளக்கமறியல் 14 நாட்களுக்கு நீடிப்பு

by Bella Dalima 04-08-2022 | 8:20 PM

Colombo (News 1st) காலி முகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளரான தானிஷ் அலியின் விளக்கமறியல் 14 நாட்களுக்கு  நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் இருந்தபோது கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் சிறைச்சாலை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது, கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.