சில அரச சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

சில அரச சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

by Bella Dalima 04-08-2022 | 4:15 PM

Colombo (News 1st) அரச சேவைகள் சிலவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் , பெட்ரோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம், சுகாதார சே​வைகள் ஆகியனவும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.