.webp)
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவெல பிணை வழங்கி உத்தரவிட்டார்.
தலா 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல பெத்தும் கேர்னருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் சந்தேகநபருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் பொல்துவ சந்தியில் கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
