இன்று (04) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைப்பு

by Bella Dalima 04-08-2022 | 4:09 PM

Colombo (News 1st) இன்று (04) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டதன் பயனை பயணிகளுக்கு வழங்கும் வகையில், பஸ் கட்டணம் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.

பஸ் கட்டணத்தின் குறைக்கப்படும் சதவீதம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணமும் குறைக்கப்படும் என  நிலான் மிராண்டா  சுட்டிக்காட்டினார்.