14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

மன்னாரில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றல்

by Bella Dalima 03-08-2022 | 5:49 PM

Colombo (News 1st) மன்னாரில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

47 கிலோ 240 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

கடற்படை நடவடிக்கை காரணமாக கடத்தல்காரர்கள் கேரளா கஞ்சாவை எடுத்துச்செல்ல முடியாமல் நிலத்தடியில் மறைத்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.