ஜோசப் ஸ்டாலின் கைது

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது

by Bella Dalima 03-08-2022 | 6:38 PM

Colombo (News 1st) இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொள்ளுப்பிட்டியவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மே மாதம் 28 ஆம் திகதி, கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிக்குகள் முன்னணியின் ஊடக செயலாளர் கொஸ்வத்தே மகாநாம தேரர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பாகவே கிருலப்பனை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 
News Alert - 03/08/2022

News Alert - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது

Posted by Newsfirst.lk Tamil on Wednesday, August 3, 2022