பெரும்போகத்தில் 60,000 ஹெக்டேரில் சோளம் பயிரிடப்படவுள்ளது

பெரும்போகத்தில் 60,000 ஹெக்டேரில் சோளம் பயிரிடப்படவுள்ளது

பெரும்போகத்தில் 60,000 ஹெக்டேரில் சோளம் பயிரிடப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2022 | 5:15 pm

Colombo (News 1st) பெரும்போகத்தில் 60,000 ஹெக்டேர் நிலத்தில் சோளத்தை பயிரிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கால்நடைகளின் உணவிற்காக பயன்படுத்தப்படும் சோளத்திற்கான பற்றாக்குறை காரணமாக தற்போது பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்து வருகின்றன. 

இறக்குமதிக்கு போதிய அந்நியச் செலாவணி இல்லாததாலும் சோளம் விளையும் நாடுகள் தமது பொருட்களை ஏற்றுமதி செய்யாததாலும் கால்நடைகளுக்கான உணவு பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனால், பெரும்போகத்தில் சோள செய்கைக்குத் தேவையான  விதைகளை வழங்க விவசாய விதை உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்தார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்