தாய்வான் ஜனாதிபதி செயலக இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

தாய்வான் ஜனாதிபதி செயலக இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

தாய்வான் ஜனாதிபதி செயலக இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2022 | 5:28 pm

Colombo (News 1st) தாய்வான் ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளத்தை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் 20 நிமிடங்களாக இணையத்தளம் செயலிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தாய்வானின் வௌிவிவகார அமைச்சின் இணையத்தள பக்கமும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

பழிவாங்கும் நோக்குடன் சீனாவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தாய்வான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்ஸி பெலோசி, தாய்வானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் அங்கு இடம்பெற்றுள்ளன. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்