COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழப்பு

COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 02-08-2022 | 7:25 PM


Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனைத்து மரணங்களும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (01) உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் 03 ஆண்களும் 04 பெண்களும் அடங்குகின்றனர். குறித்த 07 பேரில் 05 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65, 847 ஆக பதிவாகியுள்ளது.

இதுவரை 6,48,158 பேருக்கு நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.