புதிய இலங்கை சாதனை படைத்த கயந்திகா அபேரத்ன

பொதுநலவாய விளையாட்டுகள்: மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் கயந்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனை

by Bella Dalima 02-08-2022 | 5:42 PM

Colombo (News 1st) பொதுநலவாய விளையாட்டுகளில்  மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியின் முதல் சுற்றில் கயந்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனையை பதிவு செய்தார்.

போட்டித் தூரத்தை அவர் 02 நிமிடங்கள் 01 விநாடிகள் மற்றும் 20 மில்லி விநாடிகளில் கடந்தார்.

இதேவேளை, ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியின் முதல் சுற்றில் யுபுன் அபேகோன் முதலிடம் பிடித்தார்.

10.06 விநாடிகளில் அவர் போட்டித் தூரத்தைக் கடந்தார்.