.webp)
Colombo (News 1st) நிமல் சிறிபால டி சில்வா இன்று மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி முன்னிலையில் துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சராக அவர் இன்று மாலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மோசடி குற்றச்சாட்டு காரணமாக முன்னதாக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகியதுடன், விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தார்.
குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி குசலா சரோஜினியின் தலைமையிலான குழுவால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தொழிற்சங்க செயற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய, ஜனாதிபதி தொழிற்சங்க சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நகர அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நிமேஷ் ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.