ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ வைப்பு;  மூவர் கைது

ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ வைப்பு; மேலும் மூவர் கைது

by Bella Dalima 02-08-2022 | 5:00 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்ட பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மடபாத்த மற்றும் கொழும்பை சேர்ந்த 18, 22 வயதான மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.