English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
02 Aug, 2022 | 4:24 pm
Colombo (News 1st) உள்ளூர் ஆடைக் கைத்தொழில் உற்பத்திகளுக்கான உபகரணங்களுக்கு இறக்குமதி வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
COVID-19 தொற்று நிலையின் போதும், நாட்டிற்கு அந்நியச்செலாவணியை பெற்றுக்கொடுப்பதில் ஆடைக் கைத்தொழில் பாரிய பங்கு வகித்தது.
எனினும், மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடியினாலும் ஆடைத் தொழிலாளர்கள் உள்ளூர் உபகரணங்களை பெற்றுக்கொள்ளும் போது பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதற்கு தீர்வாக HS CODE எனப்படும் ஒத்திசைவு குறியீட்டு இலக்கம் 19 இன் கீழ் உள்ளூரில் தயாரிக்கப்படாத உபகரணங்களுக்கு தீர்வை வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கைத்தொழில் அமைச்சரால் இதற்கான அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனிடையே, வௌிநாட்டு பணியாளர்களால் சட்ட ரீதியாக பணம் அனுப்பப்படுகின்றமையை ஊக்குவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, சட்டரீதியான முறையில் வௌிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்கும் அந்நியச் செலாவணிக்கு, DUTY FREE எனப்படும் தீர்வை வரிச்சலுகையை அதிகரிக்க அமைச்சரவைக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணியில் 50% மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுக்கவும் குறித்த யோசனையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
10 Aug, 2022 | 05:07 PM
03 Aug, 2022 | 05:15 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS