ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2022 | 6:16 pm

Colombo (News 1st) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தொடர் அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது. 

தொடருக்கான அனுசரணை உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளன. 

தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை சந்திக்கவுள்ளது. 

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ள இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் அணிகள் தகுதிச்சுற்றின் மூலம் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெறவுள்ளன. 

இவ்வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முன்னோடியாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2018 ஆம் ஆண்டு இறுதியாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது. 

இதனிடையே, 17 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து – பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து, கிரிக்கெட் தொடரொன்றில் விளையாடவுள்ளது. 

அதற்கமைய, இரு அணிகளும் 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மோதவுள்ளன. 

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ASIA CUP 2022 Schedule


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்