.webp)

Colombo (News 1st) ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டார்.
நாட்டில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
