.webp)
India: இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா சென்ற 22 வயதான இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் காணப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, அவர் திருச்சூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த நபர் உயிரிழந்தமை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படுமென கேரள சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், குரங்கு அம்மை அறிகுறி இருந்த குறித்த இளைஞருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவருடன் தொடர்பில் இருந்த 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் பதிவான இந்த மரணம், இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றால் ஏற்பட்ட முதலாவது மரணமாக பதிவாகியுள்ளது.