22 ஆவது திருத்தம் இவ்வாரம் சமர்ப்பிக்கப்படும்

22 ஆவது திருத்தம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் தெரிவிப்பு

by Bella Dalima 31-07-2022 | 4:58 PM

Colombo (News 1st) அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்த சட்டமூலத்தை விட மேலும் சில திருத்தங்களை உள்ளடக்கி புதிய வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியிடம் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் 
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்ட இடைக்கால விதிகள், புதிய திருத்தத்தின் மூலம்  நீக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்தார்.