பிரதேச செயலகத்தில் இருந்து எரிபொருள் கைப்பற்றல்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் அலுவலக கழிவறையிலிருந்து எரிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

by Bella Dalima 31-07-2022 | 4:17 PM

Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இருந்து எரிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளரின் அலுவலகத்திலுள்ள கழிவறையில் இருந்து எரிபொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய நேற்றிரவு பிரதேச செயலகத்தின் செயலாளர் அலுவலகம், வாகன தரிப்பிடம், களஞ்சிய  அறைகள், பிரதேச செயலாளர் விடுதி ஆகிய பகுதிகள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டன.

இதன்போது, அலுவலக கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், 10 லிட்டர் பெட்ரோல், 10 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 50 லிட்டர் டீசல் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், இது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தமது அலுவலக தேவைகளுக்காகவே எரிபொருளை வைத்திருந்ததாக பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.