துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கொட்டாஞ்சேனை விவேகானந்தா மேடு வீதியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

by Bella Dalima 31-07-2022 | 4:33 PM

 

Colombo (News 1st) கொழும்பு - கொட்டாஞ்சேனை, விவேகானந்தா மேடு வீதியில்  நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந்தெரியாத இருவரினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவத்தில் கொட்டாஞ்சேனை, விவேகானந்தா மேடு பகுதியை சேர்ந்த 51 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்,

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

 
விவேகானந்தா மேடு பகுதியில் துப்பாக்கிச்சூடு

விவேகானந்தா மேடு பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு Read Here: https://bit.ly/3PPeQqH

Posted by Newsfirst.lk Tamil on Sunday, July 31, 2022