காலியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

காலியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி; இருவர் காயம்

by Bella Dalima 31-07-2022 | 9:37 PM

Colombo (News 1st) காலி - ரத்கம கம்மத்தேகொடயில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

T-56 ரக துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பகல் வேளையில்  துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு எவ்வித அச்சமும் இன்றி தப்பிச்சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில்  ரத்கம - தெவெனிகொட பகுதியை சேர்ந்த 45 வயதான நந்தலால் பிரியந்த என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 47 மற்றும் 24 வயதான இருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை

உயிரிழந்துள்ள நந்தலால் பிரியந்தவின் மகனும்  சில காலத்திற்கு  முன்னர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தததாக பொலிஸார் கூறினர்.

 

 
பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு

இக்கடுவ ரத்கம பகுதியில் பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு - ஒரு உயிரிழப்பு ; இருவர் காயம்

Posted by Newsfirst.lk Tamil on Sunday, July 31, 2022