ஜனாதிபதிக்கு இந்திய குடியரசுத் தலைவர் வாழ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் வாழ்த்து

by Staff Writer 30-07-2022 | 4:22 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட சவால்களிலிருந்து மீண்டு வர இலங்கை மக்களுக்கு உதவவேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அயல்நாட்டிற்கு முன்னுரிமையளிப்பது இந்தியாவின் முதற்கொள்கையெனவும் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரம்பரியம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளின் அடிப்படையில் அமைந்துள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடைய வேண்டுமெனவும் இந்திய குடியரசுத் தலைவர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்முவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.